ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன?

What is the cause of homosexuality and lesbians
பெண்களின் ஓரினச்சேர்க்கையை லெஸ்பியனிஸம் என்கிறோம். ஆண்களின் ஓரிச்சேர்க்கையை கே என்கிறோம். இந்த இரண்டையும் சேர்த்து பொதுவாக ஹேமாசெக்ஸ் என்று கூறுகிறோம். வெகு காலத்திற்கு இந்த ஓரினச்சேர்க்கையானது மனிதர்களுக்கு மட்டுமான ஒரு விசித்திர மனமாற்றம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் இப்போது இந்த ஓரினச்சேர்க்கை வண்டு, ஆடு, குரங்கு மாதிரியான பல்வேறு விலங்குகளில் காணப்படுவதால் இது வெறும் மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு அல்ல என்பது புரிய வந்துள்ளது. ஆக பல ஜீவராசிகளும் ஓரினச்சேர்க்கை புரிகின்றனவே...ஏன் என்றால் இதற்கு ஒரே ஒரு காரணம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை.

மரபணுக்கள், சிசு வளரும் போது கர்ப்பப் பையினுள் ஊறும் ரசாயனங்கள், குழந்தையின் மூளையில் ஊறும் ஹார்மோன்கள் என்று பல காரணங்கள் இருக்கலாம். இது தவிர வளர்ப்பு முறை, அனுபவம், வாழ்க்கை, கல்வி போன்ற பல காரணங்களும் பாலியல் நடத்தையை நிர்ணயிக்கின்றன. உதாரணத்திற்கு கருவில் இருக்கும் குழந்தையின் ஆண்பால், பெண்பால் மரபணுக்களின் எண்ணிக்கை மாறுவதால் பாலியல் தடுமாற்றங்கள் ஏற்படலாம். அதுபோக மரபணு சரியாக இயங்கினாலும் அது உற்பத்தி செய்ய வேண்டிய ஆண் மற்-றும் பெண்பால் ரசாயனம் சரியாக இயங்காவிட்டாலும் இந்த பிரச்சனை வரலாம். இது எல்லாமே சரியாக அமைந்தும் சிறு வயதிலேயே ஓரினச்சேர்க்கை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் இதுவே பிடித்து போவதால் அதிலே ஈடுபடுகின்றனர். 

No comments:

Post a Comment