திண்டுக்கல் மாவட்டத்தில்
ஜெம்பிலம்பட்டி அருகில் சில்வேம் நகரில் இருக்கும் ஜே.ஆர்.சி
துவக்கப்பள்ளியில் 10-வயதுடைய 5-ஆம் வகுப்பு மாணவி [பெயர்
தவிர்க்கப்பட்டுள்ளது] தனக்கு நேர்ந்த சம்பவத்தை குறித்து கேட்டபோது
சொல்கிறாள்:
"எல்லாரும் தூங்கிருவாங்க நானும்
அசந்து தூங்கிடுவேன். என்னை வந்து எழுப்பி கூட்டிக்கிட்டு போவாங்க.. என்னைய
பாவாடைய முதல்ல கழட்ட சொல்லுவாங்க, அப்புறமா ஜட்டிய கழட்ட
சொல்ல்லுவாங்க.. அப்புறம் அவங்களே கழட்டிடுவாங்க. கழட்டிட்டு என்னை கீழ
படுக்க சொல்லுவாங்க, “ஊம்ப” சொல்லுவாங்க...."
"யார்?" மாணவியிம் கேள்வி கேட்கப்படுகிறது...
"அண்ணன்" கேள்விக்கு பதில் கூறிய சிறுமி மீண்டும் தொடர்கிறாள்.
கால தூக்கு தூக்குன்னு சொன்னாங்க.. நான் காலை தூக்கிட்டேன். அப்புறமா அவங்க மேல படுத்துக்குவாங்க..."
வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு அனேகமாய் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிந்திருக்கும்.
ஒரு சின்ன விளக்கம்.
ஒரு
அண்ணன் இல்லை... பல அண்ணன்களுடன் ஒரே இரவுடன் முடிந்து விடாமல் நான்கு
மாதங்களாய் பாலியல் பலாத்தாரம் நிகழ்த்தப்பட்டதை கூட அறிய முடியாத சிறுமி
கூறும் அண்ணன்கள் அதே பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள்.
15-வயதுடையவர்கள்.
அதிர்ச்சியுடன் சில கணங்கள்
உறைந்துபோய் நிதானத்திற்குள் வரும்போது நெஞ்சு அதிர்கிறது. என்னத்தான்
நடந்திருக்கக்கூடும் என்ற பதட்டம் நமக்குள் ஏற்படுகிறது அல்லவா?
சற்று விரிவாக பார்ப்போம்.
தீபாவளி
அன்று ஜெ தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக தோழர் பிளாக்கி மற்றும்
வெளிச்சம் மாணவர்களுடன் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி முடிந்து 11-வது
நிமிடத்தில் தோழர் பிளாக்கிக்கு தொலைபேசி வருகிறது.
தன்னை
சில்வேம் நகரில் இருக்கும் ஜே.ஆர்.சி துவக்கப்பள்ளி ஆசிரியையாக
அறிமுகப்படுத்திக் கொண்ட அப்பெண் தங்கள் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து
சில செய்திகளை தோழர் பிளாக்கியுடன் பகிர்ந்துக் கொள்கிறார்.
விடுதியில்
தங்கி படித்த சிறுமி; இரவு நேரத்தில் மற்ற மாணவிகள் தூங்கிக்
கொண்டிருக்கும் போது இச்சிறுமியை மட்டும் அழைத்துச் சென்று பாலியல்
வன்செயலுக்கு உட்படுத்தியதும், தொடர்ந்து பலமுறை இப்படி
நடந்திருப்பதாகவும், இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு
இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் தன் ஆசிரியையிடம் முறையிட்டதாக ஆசிரியர்
குறிப்பிடுகிறார்.
"யார் அப்படி செய்தது" என்று விசாரித்தபோது 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை சுட்டிக்காட்டி இருக்கிறாள் அச்சிறுமி.
உடனடியாக
தலைமை ஆசிரியரிடம் முறையிட்ட போது விசாரித்த தலைமை ஆசிரியர் குற்றவாளிகளை
தண்டிக்காமல் சிறுமியை பள்ளியில் இருந்து நீக்கி இருக்கிறார். மேலும்
இச்சம்பவத்தை குறித்து யாரிடமும் பேசக்கூடாதென ஆசிரியருக்கு உத்தரவு
போட்டிருக்கிறார்.
பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பள்ளியில் இருந்து வெளியேற்றம். இது எப்படி நியாயமாகும்?
பள்ளி
நிர்வாகத்தின் அயோக்கியத்தனமான செயல்பாட்டிற்கு காரணம் சாதி உணர்வு.
பாதிக்கப்பட்ட மாணவி தற்போது வேறொரு பள்ளியில் மீண்டும் படிப்பை
தொடருகிறார். ஆனால் பழைய பள்ளி நிருவாகம் தங்கள் பள்ளியில் பாதிக்கப்பட்ட
சிறுமி படித்ததற்கான சான்றிதழ்களைக் கூட இன்னமும் கொடுக்காமல்
இருக்கின்றது.
இந்த அக்கிரமத்தை கண்டு பொறுக்க
முடியாமல் அப்பள்ளி ஆசிரியர் மாணவிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென
முடிவெடுத்து பத்திரிகைகள், சமூக அமைப்புகளிடம் தகவல் தெரிவித்தும் யாரும்
உதவ முன்வரவில்லை.
மாணவியின் தாய் போலிசில்
புகார் செய்யவும் விரும்பவில்லை. இச்சூழலில் மாணவியின் மனஉளைச்சளையும்,
பாதிப்புக்களையும் கண்டு கொதிப்புடன் குமுறுகிறார் ஆசிரியர்.
இன்று
தோழர் பிளாக்கியுடன் நாம் இச்சம்பவம் குறித்து விவாதித்தோம். ஆசிரியரும்
எம்முடன் தொலைபேசியின் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டார். தமிழ்நாட்டில்
இருக்கும் பெண்கள் அமைப்புகள், சமூக அமைப்புகளின் அலட்சியம், தலைமை
நிருவாகத்தின் அக்கிரமம் சில மாதங்களாக தான் எடுத்த எந்த முயற்சிகளுக்கும்
பலன் கிடைக்காமல் என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்த நிலையில் தோழர்
பிளாக்கியின் பேட்டியை தொலைக்காட்சியில் கண்டதும் நம்பிக்கை வருகிறது
ஆசிரியருக்கு...
சரியான ஆதாரங்கள் நமக்கு கிடைத்த தகவல்கள் அனைத்தும் சரியானவைதானா என்று உறுதிபடுத்திக் கொண்டதும் தோழர் பிளாக்கியிடம் கேட்டோம்...
இனி என்ன செய்யப் போகிறீர்கள்?
விரக்தியாய் சிரிக்கிறார் தோழர் பிளாக்கி...
சில
மாதங்களுக்கு முன் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்டபோது
நடத்திய போராட்டத்திற்கு எந்த அமைப்புகளும் ஆதரவு தராத காரணத்தினால்
எதுவுமற்ற நிலை ஏற்பட்டதைக் குறிப்பிடுகிறார் தோழர் பிளாக்கி.
வலுமையான
அமைப்புகளின் ஆதரவும் தொடர்ச்சியான போராட்டங்களுமே எந்த சம்பவத்திற்கும்
நியாயம் கிடைக்கும் நிலையை உருவாக்கும். ஆனால், பலரின் அலட்சிய மனோபாவம்
மேலும் தவறுகளை ஊக்குவிக்கும் காரணிகளாகவே மாறும் சமூக சூழலே நம்
தமிழகத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் வருடத்திற்கு 5000-ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
மாணவர்களிடம்
ஏற்படும் உளவியல் தாக்குதல்கள் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதன்
மூலமே மாணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதால் மாணவர்களிடம்
பிரச்சாரம் செய்யப்பட வேண்டும் என்கிறார் தோழர் பிளாக்கி.
மாணவிகள்
உளவியல் குறித்தும் அவர்கள் பாதுகாப்பு குறித்தும் இன்னும் அதிக கவனத்தை
செலுத்தும்படி சமூக அமைப்புகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக வலிமையுடன் போராட தோழமை அமைப்புகள்
முன்வரவேண்டும். ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட மாணவர் போராட்டங்கள் எல்லாம்
சாதி பிரச்சனைகளின் அடிப்படையிலேயே பார்க்கப்படுவது மகா கேவலம்.
நாம்
தற்போது முன்வைத்திருக்கும் மாணவியின் பாலியல் பலாத்தார பிரச்சனைக்குள்
சாதிப் பிரச்சனையாக பார்த்த பள்ளி நிருவாகத்தின் போக்கை கடுமையாக
கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவிக்கு கிடைக்க வேண்டிய நீதிக்கான
போராட்டத்தை முன்னெடுக்க தோழமை அமைப்புகள் உதவ முன்வரவேண்டுமாறு
கோருகிறோம். தக்க ஆதாரங்களுடன் நாம் போராட்டத்தை தொடருகிறோம்.
பாலியல்
பலாத்தாரத்திற்கு உள்ளாக்கப்பட்ட மாணவியின் தந்தை இறந்துவிட்டார். தாயின்
அலட்சியப்போக்கிற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் உணர்வுகளை ஒடுக்க
முற்படுவதென்பது என்ன நியாயம்?
ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சி ஓடுகிறது. மாணவி சொல்கிறாள்:
"எல்லாரும்
தூங்கிருவாங்க நானும் அசந்து தூங்கிடுவேன். என்னை வந்து எழுப்பி
கூட்டிக்கிட்டு போவாங்க.. என்னைய பாவாடைய முதல்ல கழட்ட சொல்லுவாங்க,
அப்புறமா ஜட்டிய கழட்ட சொல்ல்லுவாங்க.. அப்புறம் அவங்களே கழட்டிடுவாங்க..
கழட்டிட்டு என்னை கீழ படுக்க சொல்லுவாங்க, “ஊம்ப” சொல்லுவாங்க...."
இன்னும் தொடர வேண்டுமா? சொல்லுங்கள்!!!
No comments:
Post a Comment