செக்ஸ் அடிமை (sexual addiction)

Anesthaesia experienced drunk and unable to recover from some people seem to think again and again about the wine has to be sex slaves . Because of this addiction any time thinking about it , such as daily personal velaikalaikkuta could lead to trouble . It is the male , the female is common to both ....
குடி போதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்திப்பது போல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்தநேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல், அன்றாட சொந்த வேலைகளைக்கூட செய்ய முடியாமல் சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம். அது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஆண்களுக்கு இந்த குறைபாடு அதிகரிக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஆண் ஆணுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுப்படுவதைக் காணமுடியும். கீழ்க்கண்ட செயல்பாடுகளைக் காண நேர்ந்தால், அது செக்ஸ் அடிமை என்ற நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.

*அடிக்கடி சுய இன்பம் காணுதல்

*பல்வேறு உறவுகள்

*எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்

*போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்

*எக்ஸிபிஸனிசம் எனப்படும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பைக் காட்டுவதில் ஆனந்தம் அடைதல்

*செக்ஸ் துன்புறுத்தல்

*கற்பழித்தல்

*அதிக பார்ட்னர்களை விரும்புதல்

இது போன்ற குறைபாடுகள் இருந்தால், உடனடியாகப் போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உடல் நலம், பணம், சமுதாயச் சிக்கல் ஏற்படுவது மட்டுமின்றி, காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் குடும்ப உறவு சீரழிந்து கணவன் மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள் இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது. இதை மருத்துவச் சிகிச்சை, கவுன்சலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.

பொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிக குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் (satyriasis) என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால் நிம்போமேனியா (nymphomania) என்று சொல்லுவார்கள். இந்த குறைபாட்டால் தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களைப் பயமுறுத்துகின்றன. எப்படியாயினும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புபவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது, செக்ஸில் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்து எந்த நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும்

No comments:

Post a Comment